சினிமா

பிரபல வில்லன் நடிகரின் மகன் அதிரடி கைது! ஏன்? என்ன நடந்தது? வெளியான அதிர்ச்சியூட்டும் பின்னணி!!

Summary:

தமிழ் சினிமாவில் சூரியன், செங்கோட்டை, குஷி, ரெட், தெனாவட்டு, பெரிய இடத்து மாப்பிள்ளை உள்ளி

தமிழ் சினிமாவில் சூரியன், செங்கோட்டை, குஷி, ரெட், தெனாவட்டு, பெரிய இடத்து மாப்பிள்ளை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் கொடூர வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் படத்தில் பெருமளவில் பரிச்சயமானவர் நடிகர் ராஜன் பி தேவ். இவரது மகன் உன்னி தேவ். மலையாள நடிகரான இவர் பல படங்களில் நடித்துள்ளார். 

இவருக்கு பிரியங்கா என்ற பெண்ணுடன் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்குமிடையே அடிக்கடி  குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் நடிகர் உன்னி தேவ் மனைவியை கடுமையாக அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இதுகுறித்து கடந்த வாரம்  பிரியங்கா, உன்னி தேவ் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற அவர் மறுநாளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து உன்னிதேவ் அடித்து துன்புறுத்தியதால்தான் பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதாக பிரியங்காவின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். பின்னர் ஒரு வார விசாரணைக்கு பிறகு நடிகர் உன்னி தேவ்வை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement