ஆசை காட்டி மோசம் செய்த இளம்பெண்: உல்லாச வாழ்க்கைக்காக செய்த தில்லாலங்கடி வேலை..!

ஆசை காட்டி மோசம் செய்த இளம்பெண்: உல்லாச வாழ்க்கைக்காக செய்த தில்லாலங்கடி வேலை..!


a-young-woman-who-spread-love-to-young-people-pretended

ஆந்திராவில் சமூக வலைதளங்களில் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து, இளைஞர்களுக்கு காதல் வலைவிரித்த இளம்பெண் திருமணம் செய்வதாக ஆசை காட்டி பணம் பறித்துள்ளார். 

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், கித்தலூரில் வசித்து வருபவர் பராசா தனுஸ்ரீ (27), அதேபகுதியை சேர்ந்த பரசா ரவி தேஜா இருவரும் காதலித்து வந்தனர். காதலர்களான இருவரும் கடந்த சில வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ திட்டமிட்டனர். இதற்காக சமூக வலைதளங்களில் இளைஞர்களை குறி வைத்து போலி கணக்கு தொடங்க முடிவு செய்தனர். தனுஸ்ரீ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் நான்கு கணக்குகளை தொடங்கி  அதில் அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் குறுகிய காலத்தில் அவரின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகரித்தது.  இதில் கம்மென்ட் செய்பவர்களில் சிலரை  தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பதில் அளித்து பழக்கப்படுத்திக் கொண்டு போன் நம்பர் வாங்கி அவய்களிடம்  இனிமையான வார்த்தைகளை பேசி, காதல் வலை விரித்துள்ளார். அவரது காதல் வலையில் விழுந்ததும் அவர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி நம்ப வைத்துள்ளார்.

அதன் பின்னர் அவரது தாயின் உடல்நிலை சரியில்லை, வீட்டுக்கடனின் தவனை கட்ட வேண்டும். உடல் நிலை பாதிப்பு என பல காரணங்களை சொல்லி செலவுக்கு பணம் கேட்டு வாங்கியுள்ளார். 8 மாதங்களில் ரூ.31.66 லட்சத்தை இளைஞர்களிடம் பெற்றுள்ளார். தனுஸ்ரீயிடம் தெலங்கானாவை சேர்ந்த இளைஞர் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். தனுஸ்ரீயிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ராச்சகொண்டா சைபர் கிரைமில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தனுஸ்ரீ அவரது காதலன் ரவிதேஜா இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை பல இளைஞர்களை ஏமாற்றி இருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. மெடிப்பள்ளி காவல் நிலையத்தில் ஏற்கனவே இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ராச்சகொண்டா சைபர் கிரைம்  இன்ஸ்பெக்டர் பி.ராஜூ தெரிவித்தார்.