நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
நண்பர்களுடன் நடந்து சென்ற இளைஞர்... தும்மல் வந்து சரிந்து விழுந்து உயிரிழந்த பரிதாபம்..!!
உத்தர பிரதேச மாநிலத்தில் நண்பர்களுடன் நடந்து சென்ற இளைஞர் திடீரென வந்த தும்மலுக்கு பிறகு, சரிந்து விழுந்து, உயிரிழந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் கித்வாய்நகர் காலி பகுதியை சேர்ந்த ஜுபைர் (18) என்பவர் இரவில் வீட்டிற்கு செல்வதற்காக தனது நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது அவருக்கு தும்மல் வந்துள்ளது. நடந்தபடியே தும்மிய அந்த இளைஞர் சிறிது நேரத்திற்கு பிறகு, நண்பரின் தோளில் கைபோட்டபடி சோர்வாக நடந்து செல்லும் போதே, திடீரென சரிந்து, விழுந்துள்ளார்.
இதனால், பயந்து போன அவரது நண்பர்கள் உதவி கேட்டு அலறியுள்ளனர். பிறகு அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த இளைஞரை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் அந்த இளைஞர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தும்மலை தொடர்ந்து, மாரடைப்பு ஏற்பட்டு அந்த இளைஞர் உயிரிழந்து இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
18 வயது இளைஞர் ஒருவர், இரவில் நண்பர்களுடன் நடந்து செல்லும் போது திடீரென தும்மல் வந்ததில், சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
जिंदगी न कोई ठिकाना.........रास्ते चलते अचानक छींक आई, लड़के ने अपना गला पकड़ा और उसकी मौत हो गई. pic.twitter.com/PVtWXfZxKH
— Shubham shukla (@ShubhamShuklaMP) December 4, 2022