ஒரே ஜாலிதான்.. ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 11 நாட்களுக்கு விடுமுறை.. வங்கி பயனர்கள் இந்த தேதியில் கவனமாக இருங்கள்.!

ஒரே ஜாலிதான்.. ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 11 நாட்களுக்கு விடுமுறை.. வங்கி பயனர்கள் இந்த தேதியில் கவனமாக இருங்கள்.!



A total of 11 days holiday in April

இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவன வங்கிகளுக்கு விடுமுறை மத்திய அரசால் அறிவிக்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் மாநில சட்டத்தின் கீழ் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். 

இந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி ஆண்டு கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி, 

India

ஏப்ரல் 7-ம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 8ம் தேதி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை, ஏப்ரல் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 28ஆம் தேதி சனிக்கிழமை ரம்ஜான் ஆகிய நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதனை தவிர்த்து ஏப்ரல் மாதத்தில் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் இருக்கின்றன. இதனால் 11 நாட்கள் மொத்தமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பது தெரியவந்துள்ளது.