தொட்டிக்குள் விழுந்த பூனைக்குட்டியை மீட்க பாசப்போராட்டம் நடத்திய குரங்கு.. கியூட் வீடியோ.!

தொட்டிக்குள் விழுந்த பூனைக்குட்டியை மீட்க பாசப்போராட்டம் நடத்திய குரங்கு.. கியூட் வீடியோ.!


a Monkey Want Help to Recover Cat from Small Tank Video Goes Viral

தொட்டிக்குள் தவறி விழுந்த பூனையை காப்பாற்ற குரங்கு நடத்திய பேசப்போராட்டம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்திய ஐ.எப்.எஸ் அதிகாரி சுசந்த் நந்தா ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில், "குட்டி பூனையொன்று சிறிய அளவிலான தொட்டிக்குள் விழுந்து, பின்னர் மீண்டும் வெளியேற இயலாமல் அபயக்குரல் எழுப்பியுள்ளது. இதனைகவனித்த குரங்கு ஒன்று, பூனைக்குட்டியை காப்பாற்ற முயற்சித்து தொட்டிக்குள் இறங்குகிறது. 

ஆனால், பூனைக்குட்டியை தூக்கியவாறு தொட்டிக்குள் இருந்து குரங்கால் வெளியேற இயலவில்லை. இதனால் குரங்கு தொடர்ந்து உதவிக்கேட்க, அப்பகுதியை சார்ந்த சிறுமியொருவர் குரங்கின் செயலை கண்டு தொட்டி அருகே வருகிறார். தொட்டி அருகே சிறுமி வருவதை கண்ட குரங்கு, அவரிடம் உதவி செய்ய கோரிக்கை வைக்கிறது. 

நிலைமையை புரிந்துகொண்ட சிறுமியோ தொட்டிக்குள் இறங்கி பூனைக்குட்டியை தூக்குகிறார். பூனைக்குட்டி மேலே வந்ததும் தொட்டியின் விளிம்பில் இருந்துகொண்டு அதனை பிடித்துக்கொண்ட குரங்கு, தன்னுடன் அதனை அணைத்துக்கொண்டு அமர்ந்து இருக்கிறது". இந்த வீடியோ வைரலாகி வருகிறது.