இந்தியா

வடநாட்டு வெல்லம் வேணுமா?.. இந்த வீடியோ பார்த்துட்டு வாந்தி எடுக்காம இருந்தா வாங்கிக்கோங்க..!

Summary:

வடநாட்டு வெல்லம் வேணுமா?.. இந்த வீடியோ பார்த்துட்டு வாந்தி எடுக்காம இருந்தா வாங்கிக்கோங்க..!

வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் நபர்கள் கால்களில் உள்ள செருப்பை கூட கழற்றாமல் அதனை உருண்டை பிடிக்கும் பணியில் ஈடுபடும் வீடியோ வைரலாகியுள்ளது.

கரும்புகளில் இருந்து சாறு பிரிக்கப்பட்டு வெல்லமானது பாகு போல காய்ச்சப்பட்ட பின்னர், உருண்டையாக பிடிக்கப்பட்டு கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவை கரும்பு அதிகம் விளையும் நிலங்களில் வைத்தும், வெல்ல தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் தயார் செய்யப்படுகிறது. 

தமிழகத்தில் நமது மாநிலத்திலேயே தயார் செய்யப்படும் வெல்லமும், வெளிமாநிலத்தில் இருந்து வரும் வெல்லமும் மக்களால் அதிகளவில் உபயோகம் செய்யப்படுகிறது. இவற்றை பெரும்பாலும் பொங்கல், ஊர் திருவிழா பண்டிகையின் போது சர்க்கரை பொங்கல் செய்ய பயன்படுத்துவது வழக்கம். சில மருந்துக்கு உபயோகம் செய்வார்கள். 

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயில் வெல்லத்தயாரிப்பு மையத்தில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், கால்களில் உள்ள செருப்புகளை கூட கழற்றாமல் வெல்லப்பாகினை உருண்டையாக பிடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

பின்னணியில் தமிழ் மொழியில் பேசும் நபர், "நண்பர்களே இந்த வெல்லத்தினை தான் நீங்கள் பொங்கலுக்கு உபயோகம் செய்யபோகிறீர்களா?. இங்கு ஒருவர் கூட வெல்ல தயாரிப்பின் போது கால்களில் உள்ள செருப்பை கூட கழற்றாமல் உருண்டை பிடித்து வருகிறார்கள். இதனை உபயோகம் செய்ய வேண்டாம்" என்று கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement