திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியை கொன்று... உப்பு தூவி புதைத்த காதலன்..!

திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியை கொன்று... உப்பு தூவி புதைத்த காதலன்..!



A lover who killed his girlfriend and buried her with salt after he forced her to marry him

திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலியை அழைத்து சென்று கொலை செய்து உப்பை தூவி புதைத்த காதலன் மற்றும் அவருக்கு துணையாக இருந்த நான்கு பேரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் ரசூல்பூர் கிராமத்தில் வசிப்பவர் ஐஸ்பிரீத் கவுர் (24). இவரும் அதேபகுதியை சேர்ந்த பரம்ப்ரீத் சிங் (21) என்பவரும் காதலித்து வந்தனர்.
கடந்த நவம்பர் 24-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதை தொடர்ந்து  தனது காதலனை நம்பி ஐஸ்பிரீத் கவுர் 12 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் பணத்துடன், வீட்டை விட்டு வெளியேறினார். இருவரும் காரில் புறப்பட்டு சென்றனர். அப்போது வழியில், மற்றொரு நண்பரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

காரில் வைத்து  ஜஸ்பிரீத் கவுரை கழுத்தை நெரித்து இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். அதன் பின்னர் அவரது உடலை அந்த பகுதியில் இருந்த கால்வாயில் வீசினர். கால்வாயில் போதுமான தண்ணீர் இல்லாததால், அவர்களது பண்ணை வீட்டிற்கு மீண்டும் உடலை எடுத்துச் சென்றனர். அங்கு ஐஸ்பிரீத் கவுரின் உடல் மீது உப்பை தூவி குழிதோண்டி புதைத்து விட்டு அங்கு அமர்ந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ஐஸ்பிரீத் கவுரின் பெற்றோர் மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பரம்ப்ரீத் சிங்கும், ஐஸ்பிரீத் கவுரும் காதலித்தது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினர் பரம்ப்ரீத் சிங்கை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், குற்றம்சாட்டப்பட்ட காதலன் பரம்ப்ரீத் சிங் மேலும் மூன்று பேர் சேர்ந்து ஐஸ்பிரீத் கவுரை கொலை செய்துள்ளனர். ஐஸ்பிரீத் கவுர், திருமணம் செய்து கொள்ள தனது காதலனை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். அதனால் அவரை கொன்றுவிட பரம்ப்ரீத் சிங் முடிவு செய்தார்.

எனவே அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, வீட்டில் இருந்து வருமாறு அழைத்து வநது, காரில் வைத்து கழுத்தை நெரித்து கொன்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பரம்ப்ரீத் சிங் உள்பட  நான்கு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகிறோம் என்றனர்.