சாதித்த தந்தையும்., தோல்வியடைந்த மகனும்... பொதுத்தேர்வில் இப்படியொரு இன்ப அதிர்ச்சி சம்பவம்... கவனித்தீர்களா?..!

சாதித்த தந்தையும்., தோல்வியடைந்த மகனும்... பொதுத்தேர்வில் இப்படியொரு இன்ப அதிர்ச்சி சம்பவம்... கவனித்தீர்களா?..!


a fATHER vICTORY SSLC PUBLIC EXAM

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தந்தை தேர்ச்சி பெற மகன் தோல்வியடைந்த சம்பவம் நடந்துள்ளது. 

படிப்பதற்கு வயது தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில் தந்தை அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைய, மகனோ 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த சம்பவம் நடந்துள்ளது. மனஉறுதியால் படித்த தந்தையின் வெற்றியையும், வயது கோளாறால் கோட்டை விட்ட மகனின் தோல்வியையும் உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவை சார்ந்தவர் பாஸ்கர். இவர் கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னதாக ஏழாம் வகுப்பு படிக்கையில், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை கைவிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, குடும்பத்திற்காக உழைத்து திருமணமும் செய்து குழந்தைகளும் பெற்றெடுத்துள்ளார். 

இந்த நிலையில், அவரது மகன் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதனால் தந்தைக்கும் மகன் போல படிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்த நிலையில், 43 வயதில் அவர் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 43 வயதான தந்தை தனது மன உறுதியாய் படித்து தேர்வில் வென்ற எடுத்த நிலையில், மகனோ தோல்வி அடைந்து இருக்கிறார்.