புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கல்லூரி மாணவனின் அட்டகாசம்... மாணவிகளின் கழிவறையில் ரகசிய கேமரா... 2000 ஆபாச வீடியோ எடுத்த மாணவன் கைது..!
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவியர் கழிவறையில் மாணவன் ஒருவன் ரகசிய கேமரா வைத்து ஆபாச வீடியோ எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவனின் செல்போனில் மாணவிகள் கழிவறையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட 2000 மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டு கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
மேலும் மாணவிகளின் அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்கள் அந்த மாணவனின் செல்போனில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே இதே குற்றத்துக்காக மாணவன் கல்லூரி நிர்வாகத்திடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் அதே தவறை மீண்டும் செய்துள்ளதையடுத்து அந்த மாணவன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து முழு விசாரணை நடந்த பின்னர் அந்த மாணவன் மீது எந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்ற தகவல் வெளியாகும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.