காதலை கைவிட நினைத்த கல்லூரி மாணவி.. ஆட்டை அறுப்பது போல் அறுத்துக்கொன்ற காதலன்.. பரபரப்பு சம்பவம்..!A college student who thought of giving up on love.. The lover who slaughtered her like a goat.. Sensational incident..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுசித்ரா என்ற மாணவி. இவரது தந்தை ஓட்டுனராகவும், தாய் உடைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்தும் வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஹோசாஹள்ளியில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

மேலும் அதே கல்லூரியை சேர்ந்த முன்னாள் மாணவரான தேஜாஸ் என்பவருடன் சுசித்ராவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில் அடிக்கடி காதலர்களுக்கிடையில் சண்டை வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக கூறி சுசித்ராவை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று தேஜாஸ் பேசி உள்ளார்.

love issue

ஆனால் அப்போதும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தேஜஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ப சுசித்ராவின் கழுத்தை கரகரவென்று அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் சுசித்ராவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சுசித்ராவை அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் சுசித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

love issue

விசாரணையில் தேஜாஸ் சுசித்ரா ஆகிய இருவரும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் காதலர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்துள்ளது. இதனால் சுசித்ரா தேஜாஸை விட்டு பிரிய முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த தேஜாஸ் சுசித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தேஜாஸை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.