"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்... 8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.!! கால்வாயில் வீசப்பட்ட உடல்.!!
ஆந்திர மாநிலத்தில் 8 வயது சிறுமி 3 சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்றாம் வகுப்பு மாணவி
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்திருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று பள்ளி சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்ப தாமதமானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே உள்ள கால்வாயில் இருந்து சிறுமி பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
கூட்டு பாலியல் பலாத்காரம்
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி படிக்கும் அதே பள்ளியைச் சேர்ந்த 13 முதல் 17 வயதிற்கு உட்பட்ட 3 மாணவர்கள் சிறுமியை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் இறந்த சிறுமியின் உடலை அருகே உள்ள பம்பு செட்டின் கால்வாயில் வீசி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: நாடகக் காதல்... கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி.!! 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது.!!
இதையும் படிங்க: பகீர் சம்பவம்... கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவன்.!! கத்திரிக்கோலால் சம்பவம் செய்த காதல் ஜோடி.!!