பகீர் சம்பவம்... கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவன்.!! கத்திரிக்கோலால் சம்பவம் செய்த காதல் ஜோடி.!!husband-murdered-by-his-wife-and-her-lover-for-interfer

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் தகாத உறவை தட்டி கேட்ட கணவன் கத்திரிக்கோலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக இறந்த நபரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை காவல்துறை கைது செய்துள்ளது.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்த காதல்

உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஏடிஎஸ் சர்க்கிள் பகுதியில் பிரஹலாத் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பூஜா என்பவறும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் பூஜா துப்புரவு தொழிலாளியான மகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். எனினும் திருமணத்திற்கு பின்பும் பூஜா மற்றும் பிரஹலாத்திடையே காதல் தொடர்ந்தது.

India

தனிமையில் உல்லாசம்

இந்நிலையில் தான் தங்கி இருக்கும் பகுதியில் பிரஹலாத்திற்கு வேலை வாங்கிக் கொடுத்த பூஜா அடிக்கடி அவரை சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி மகேஷ் வீட்டில் இல்லாத போது பூஜா மற்றும் பிரஹலாத் ஆகிய இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஷாக்கிங் வீடியோ... "கட்டிப்புடி கட்டிப்புடிடா.." முதல்வர் அறையில் பெண் ஆசிரியையுடன் நெருக்கம்.!!

கத்திரிக்கோலால் குத்தி படுகொலை

அப்போது எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென மகேஷ் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரை கண்டதும் கள்ளக்காதல் ஜோடி அதிர்ச்சி அடைந்திருக்கிறது. மகேஷ் தனது மனைவி பூஜா மற்றும் அவரது கள்ளக்காதலன் பிரஹலாத்தை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரஹலாத் மற்றும் பூஜா இருவரும் வீட்டிலிருந்த கத்திரிக்கோல் எடுத்து மகேஷை குத்தி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஒரு வாரத்திற்கு பிறகு கொலையாளிகளான கள்ளக்காதல் ஜோடிகளை கைது செய்துள்ளது.

இதையும் படிங்க: திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு... தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி.!!