மூன்று முறை தோல்வி! நான்காவது முறை சாதித்து காட்டிய 78 வயது பாட்டி! குவியும் வாழ்த்துக்கள்.



78 years old women passed sslc exam in kerala

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி என்னும் பகுதியை சேர்ந்தவர் என்.பங்கஜாக்சி பாட்டி. 78 வயதாகும் பங்கஜாக்சி பாட்டி தொடக்க மற்றும் இடைநிலை தேர்வுகளில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில் முதியோர் கல்வியில் சேர்ந்த பங்கஜாக்சி பாட்டி கடினமாக பயின்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ளார். முதல் மூன்று முறை தேர்வு எழுத்து தோல்வியை சந்தித்த பாட்டி அதன்பின்னர் தேர்வு எழுத தயங்கியுள்ளார்.

Mystery

இதனை அடுத்து பாட்டியின் மகன் மற்றும் உறவினர்கள் கொடுத்த ஊக்கம் மற்றும் உற்சாகத்தை அடுத்து நான்காவது முறையாக தேர்வு எழுதிய பாட்டி இந்த முறை தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். 78 வயதில் பாட்டி ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளதை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து அந்த பாட்டிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.