இந்தியா

பாவிங்களா..! 7 வயது சிறுமியின் வயிற்றை கிழித்து கல்லீரலை எடுத்து சாப்பிட்ட கொடூரம்.. மனதை ரணமாக்கும் கொடூர கொலை

Summary:

7 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்து, வயிற்றை கிழித்து கல்லீரலை எடுத்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

7 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்து, வயிற்றை கிழித்து கல்லீரலை எடுத்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத தம்பதி ஒருவர், சிறுமியின் கல்லீரலை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்ற மூடநம்பிக்கையில் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். அதில் பரசுராம் என்பவர் அங்குள், பீரன் ஆகிய இருவரிடமும் பணம் கொடுத்து சிறுமி ஒருவரை கடத்திவருமாறு கூறியுள்ளார். இந்நிலையில் அங்குள், பீரன் இருவரும் கடந்த சனிக்கிழமை மாலை தனது குடியிருப்புக்கு அருகே தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஒருவரை கடத்தியுள்ளனர்.

மேலும் அந்த சிறுமியை கொலை செய்வதற்கு முன்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகவும் தெரிகிறது. பின்னர் இருவரும் மதுபோதையில் சிறுமியை கொலை செய்து, அவரது வயிற்றை கிழித்து உடலில் இருந்து கல்லீரல், நுரையீரல் போன்ற பாகங்களை பிடுங்கி எடுத்துள்ளனர்.

மறுநாள் காலை சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு சாலை ஓரமாக கிடப்பதை கண்டா பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் சிறுமியின்  உடலலை கைப்பற்றி குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர்.

குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் இதுபோன்ற நடந்த இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement