ஒரு மாதத்திற்கு முன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகனின் உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் 60 வயது தந்தை!

ஒரு மாதத்திற்கு முன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகனின் உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் 60 வயது தந்தை!



60-year-old searches river banks for his son swept away by flood in Kishanganj

ஒரு மாதத்திற்கு முன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தனது மகனின் உடலை தேடி அவரது தந்தை தினமும் ஆற்றங்கரை ஓரமாக தேடி அலையும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் 60 வயதாகும் கமல் சிங். இவரது 28 வயது மகன் கதம் என்பவர் பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியில் இருந்து பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் வரும் வழியில் பாலத்தின் மேலே வெள்ளநீர் வேகமாக சென்றுள்ளது.

அங்கிருந்தவர்கள் வெள்ளநீர் அதிகமாக செல்வதால் பாலத்தின் மீது பைக்கில் செல்ல வேண்டாம் என சொல்லியும் கேட்காமல் கதம் இருசக்கர வாகனத்தில் பாலத்தின் மீது சென்ற போது பரிதாபமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

மகன் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது தெரியாத கமல் சிங் இது குறித்து மறுநாள் செய்தித்தாளில் பார்த்துதான் தெரிந்து கொண்டார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கமல் சிங்கின் மகனின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.

மீட்புக்குழுவினர் அவரது பைக்கை மட்டுமே கைப்பற்றினர். பல இடங்களில் தேடியும் கதமின் உடல் கிடைக்காததை அடுத்து மீட்புக் குழுவினர் உடலை தேடுவதை நிறுத்தி விட்டனர். ஆனாலும் தனது மகனின் உடலை தேடி இந்தூரை சுற்றியுள்ள அனைத்து ஆற்றங்கரைகளிலும் தினமும் தனது மகனின் புகைப்படத்துடன் அவரை தேடி அலைந்து கொண்டிருக்கிறார் கமல் சிங்க்.

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மகனை ஒருமாதமாக தேடும் கமல் சிங்கின் நிலைமை அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கமல் சிங்கிற்கு இரண்டு பிள்ளைகள் தான். அதில் கடந்த ஏப்ரல் மாதம் அவரது மகள் உடல்நல பாதிப்பால் உயிரிழந்துள்ளார். மகள் இறந்து இரண்டு மாதங்களில் மகனையும் பறிகொடுத்துவிட்டு நடைப்பிணமாக வாழந்துவருகிறார் கமல் சிங்க்.