மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
கோரவிபத்தில் 57 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!. கர்ப்பிணி ஒருவர் குழந்தை பிறந்து உயிரிழந்துள்ளார்!.

தெலங்கானா மாநிலத்தில் கொண்டகட்டு என்ற பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் மலைக் கோயிலிலிருந்து மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து, ஜக்தியால் என்ற பகுதியை நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு மலைப்பாதை வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிந்து புரண்டது.
இந்த விபத்தையடுத்து அப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டு, ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து, பேருந்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் 2 கர்ப்பிணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 9 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் விபத்தால் அதிர்ச்சி அடைந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். அதிர்ச்சியில் குழந்தை பிரசவமும் ஏற்பட்டு, பிறந்த குழந்தையும் இறந்து விட்டது. மேலும் ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணும் உயிரிழந்தார்.
அங்கு நடந்த விபத்தில் நேற்று உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக இருந்தது. தற்போது 57 ஆக உயர்ந்துள்ளது. அங்கு நடந்த விபத்து சம்பவம் அணைத்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.