அரசியல் இந்தியா

மகளின் திருமணத்திற்காக ரூ.500 கோடி செலவிடும் பாஜக அமைச்சர்!

Summary:

500 crores for Bjp minster daughter marriage

கர்நாடக மாநில அமைச்சர் ஸ்ரீ ராமுலு என்பவர் தனது மகளின் திருமணத்துக்காக ரூ. 500 கோடி செலவில் நடத்தி வருகிறார்.

கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு தன் மகளின் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார். பெங்களூரில் உள்ள பேலஸ் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறும் திருமணத்துக்காக கடந்த 27-ஆம் தேதியில் இருந்து கொண்டாடி வருகின்றனர்.

செந்தூரம், குங்குமம், சந்தனம், அரிசி உள்ளிட்டவை அடங்கிய அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளன. இந்த விழாவில்  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் உள்ள முன்னணி தலைவர்கள் , கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மகளின் திருமணத்திற்காக ரூ 500கோடி செலவு செய்யும் அமைச்சரின் செயல் இந்தியாவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement