இந்தியா

50 வயது பெண்ணையும் விட்டு வைக்காத காமக்கொடூர கும்பல்! வாயில் மதுவை ஊற்றி நடந்த கொடூரம்!

Summary:

50 year women sexually abused by 6 people

பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்திலுள்ள கவுர்ச்சி பயாம்பூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கணவரை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை கட்டாயப்படுத்தி அவரது வாயில் மதுவை ஊற்றி மயங்க வைத்துள்ளனர்.

பின்னர் அவர் மயங்கியதும் அவரை பாலியல் வன்கொடுமை செய்து அதனை செல்போனில் வீடியோவாகவும்  எடுத்துள்ளனர். மேலும்  இதனை விகாஷ்குமார் என்பவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அந்த கும்பலில் 6 பேரை கைது  செய்தனர். மேலும் விகாஸ்குமாரிடமிருந்த அந்த வீடியோவையும் அழித்துள்ளனர். தலைமறைவாகவுள்ள மற்றொரு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement