இந்தியா டெக்னாலஜி

விரைவில் வருகிறது 5-ஜி சேவை: கட்டணங்கள் எப்படி இருக்குமுன்னு தெரிஞ்சா அசந்து போவீங்க..!

Summary:

விரைவில் வருகிறது 5-ஜி சேவை: கட்டணங்கள் எப்படி இருக்குமுன்னு தெரிஞ்சா அசந்து போவீங்க..!

4ஜி டேட்டா பேக்கை‌ போலவே 5ஜி டேட்டா பேக்குகளின் விலையும் குறைவகவே இருக்கும் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

உலகின் பல்வேறு நாடுகளில் 5ஜி தொலை தொடர்பு பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் இப்பொழுது வரை 4ஜி அலைக்கற்றை மூலம் தொலைத் தொடர்பு சேவை, இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022 இறுதிக்குள் 5ஜி சேவை நடைமுறைக்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மத்திய அமைச்சரவை அண்மையில் 5ஜிஅலைகற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு சம்மதம் வழங்கியது. இந்த ஏலத்தில் டெலி கம்யூனிகேஷன் நிறுவனங்கள் 20 ஆண்டு கால அளவிலான அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்து சேவையை வழங்க முடியும். இந்நிலையில் 5ஜி சர்வீஸ் முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள 20 முதல் 25 முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் முதற்கட்டமாக பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், லக்னோ, பூனே, சென்னை, காந்திநகர், ஜாம்நகர், மும்பை, அகமதாபாத், சண்டிகர், ஆகிய 13 நகரங்களுக்கு 5ஜி சர்வீஸ் வழங்கப்படும் என்றும், இதர நகரங்களுக்கு பின்னர் விரிவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உலக சந்தை விலையை விட இந்தியாவில் 5ஜி டேட்டா சர்வீஸ் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். 4ஜி டேட்டா பேக்கை‌ போலவே 5ஜி டேட்டா பேக்குகளின் விலையும் குறைவகவே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement