கணவன் கூட இருந்தும் தீராத ஆசை!! 6 குழந்தைகளின் தாய்.. 40 வயதில் 14 வயது சிறுவனுடன் ஓட்டம்..

கணவன் கூட இருந்தும் தீராத ஆசை!! 6 குழந்தைகளின் தாய்.. 40 வயதில் 14 வயது சிறுவனுடன் ஓட்டம்..


40 years women escaped with 14 years boy in Gujarat

6 குழந்தைகளுக்கு தாயான 40 வயது பெண் ஒருவர் 14 வயது சிறுவனுடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சம்பவமானது குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தின் பஃதேபுரா தாலுகாவின் சக்ரபதா எனும் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தனது 6 குழந்தைகள் மற்றும் கணவருடன் வசித்துவருகிறார். அந்த பெண் காந்தி நகரில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்துவரும் நிலையில், தன்னுடன் பணியாற்றும் 14 வயது சிறுவனுடன் காதல் வலையில் விழுந்துள்ளார்.

இருவரும் காதலித்துவந்தநிலையில், சிறுவனுடனே சென்றுவிடுவது என தீர்மானித்து, அந்த பெண் தனது கணவர் மற்றும் 6 குழந்தைகளை விட்டு விட்டு சிறுவனுடன் சென்று தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் 14 வயதாகும் தனது மகனை அந்த பெண் கடத்தி சென்றுவிட்டதாக அந்த சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதேநேரம், அந்த சிறுவனின் வயதில் பெரும் குழப்பம் நிலவுதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தனது மகன் 2007-ல் பிறந்தான், அவனுக்கு 14 வயது தான் ஆகிறது என அவனின் தந்தை ஆதார் அட்டையை ஆதாரமாக காட்ட, இல்லை இல்லை, நான் 1997-ல் பிறந்தவன், எனக்கு சட்டப்படியான வயது இருப்பதாக அந்த சிறுவன் அவனது தந்தையுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்".

சிறுவனின் வயதில் குழப்பம் நீடிப்பதால் சிறுவனின் தந்தையிடம் சிறுவனின் பிறப்பு சான்றிதழை கொண்டுவரும்படி தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.