இந்தியா

பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல்! 4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை!

Summary:

4 Nakshal killed

பீகாரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பீகார் மாநிலம் பச்சிம் சம்பரான் மாவட்டத்தில் பகாகா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியுள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அதிரடி படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு நக்சலைட் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்து சரணடையும்படி பாதுகாப்புப் படையினர் உத்தரவிட்டனர். ஆனால் நக்சலைட்டுகள் சரணடையாமல் துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்டது. அங்கு பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  பாதுகாப்பு படையில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அங்கு பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து ஏ.கே. 56 ரக துப்பாக்கி, எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி உள்ளிட்ட உயர்ரக ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


Advertisement