இந்தியா

500 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய பேருந்து! 33 பேர் பரிதாப பலி!

Summary:

33 person died in bus accident


இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பயணிகள் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தின் பஞ்சார் பகுதிக்கு அருகே பல பயணிகள் பயணித்த தனியார் பேருந்து ஒன்று  ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பஞ்சாரிலிருந்து கடகுஷானி பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த தனியார் திடீரென பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.

இந்த விபத்துக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த விபத்தில் உயிரிழந்த 25 பயணிகளின் உடல்கள் மீட்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது. மேலும், மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்றுவந்தது.

இந்நிலையில், தற்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாகவும், இந்த விபத்தில் 37 காயமடைந்துள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது.  அங்கு ஏற்பட்ட விபத்து எவ்வாறு நடந்தது என்பதற்கான  காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


Advertisement