இந்தியா

திருமணமான பெண்ணோடு ஏற்பட்ட முகநூல் பழக்கம் கொலையில் முடிந்தது... காரணம் என்ன தெரியுமா.?

Summary:

திருமணமான பெண்ணோடு ஏற்பட்ட முகநூல் பழக்கம் கொலையில் முடிந்தது... காரணம் என்ன தெரியுமா.?

ஹைதராபாத்தில் பிரசாந்தி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா ரெட்டி(32). இவருக்கு திருமணமான நிலையில் ஹைதராபாத் அம்மர் பேட்டை பகுதியைச் சேர்ந்த யாஸ்மா குமார்(32) என்பவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தால் இருவரும் தங்களது செல்போன் நம்பரை பகிர்ந்து கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

முதலில் இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். பின் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது‌. இந்நிலையில் ஒரு நாள் யாஸ்மா குமார், ஸ்வேதாவிடம் வீடியோ காலில் பேசி கொண்டிருந்த போது ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக நிற்கும் படி கேட்டு கொண்டுள்ளார்.

ஸ்வேதாவும் காதலன் தானே என நம்பி நிர்வாணமாக நின்றிருக்கிறார். அதை அப்படியே யாஸ்மாகுமார் ரெக்கார்டு செய்துள்ளார். அந்த வீடியோவை ஸ்வேதாவுக்கு அனுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி மிரட்டியுள்ளார். மேலும் ஸ்வேதாவின் சொத்துகள் அனைத்தும் வேண்டும் என கூறி மிரட்டி வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்வேதா யாஸ்மாகுமாரை தீர்த்து கட்டுவதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்துள்ளார். திட்டமிட்டு யாஸ்மாகுமாருக்கு போன் செய்து வீட்டிற்கு வர வைத்துள்ளார் ஸ்வேதா. வீட்டிற்கு அவர் ஆசையுடன் வந்தவுடன் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் உடலை சாலையில் வீசியிருக்கிறார்கள். பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement