தமிழகம் இந்தியா

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3000 கொரோனா நிவாரண நிதி!! ஒப்புதல் வழங்கினார் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Summary:

புதுச்சேரியில் அனைத்து குடும்பங்களுக்கு ரூ.3000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாநி

புதுச்சேரியில் அனைத்து குடும்பங்களுக்கு ரூ.3000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்தநிலையில் அதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்தியா முழுவதும் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் இந்தியாவின் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நடைமுறையினால் பலர் வேலை இழந்து சாப்பாட்டிற்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஏழை மக்களின் வறுமை போக்க தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு, அதன் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாயும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதேபோன்று தற்போது பாண்டிச்சேரியிலும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 3 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக அனைத்து ரேஷன்கார்டுக்கும் ரூ.3000 வழங்க அனுமதிக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. 

இதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் அங்கு 3,50,000 குடும்பங்களுக்கு தலா ரூ.3000 வழங்கப்பட உள்ளது.


Advertisement