13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
3 வயது குழந்தை கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு... சாகும் வரை தூக்கிலிட கோர்ட் உத்தரவு...!
மூன்று வயது குழந்தையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததில் குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த வழக்கில் அந்த கொடூர குற்றவாளியை சாகும் வரை தூக்கிலிட கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாபர் நகரில் ஜம்சத் டவுன் பகுதியில் வசிக்கும் மூன்று வயது பெண் குழந்தையை சுரேந்தர், ராஜேஷ் என்ற இரண்டு வாலிபர்களும் இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து அந்த மூன்று வயது பெண் குழந்தையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அதன் பின்னர் அந்த குழந்தையை மிக கொடூரமாக தாக்கியதில் அந்த குழந்தை மூச்சுச்திணறி மூர்ச்சையானது. பிறகு அந்த குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த வருடம் ஜூன் மாதம் 12ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் கொடுத்த புகாரில் சுரேந்தர், ராஜேஷ் மீது கடத்தல், கொலை செய்தல், குற்றவியல் சதி, போக்சோ போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உத்தரபிரதேச போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாபு ராம், இது அரிதிலும் அரிதான வழக்கு என்று குறிப்பிட்டுள்ளார். வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து சுரேந்தரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்றும் மற்றொரு குற்றவாளி ராஜேஷுக்கு வாழ்நாள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்து உள்ளார்.