ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூலியம்! 3 பேர் சுட்டுக்கொலை!

3 terrorist killed in jammu kashmir


3 terrorist killed in jammu kashmir

ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்தப் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். 

அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். அதற்கு பதிலடி தரும் வகையில், பாதுகாப்புப் படையினரும் தாக்குதல் நடத்தினா். அதையடுத்து இரு தரப்பினருமிடையே மோதல் ஏற்பட்டது. 

இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புல்வாமா பகுதியில் கடந்த மூன்று வாரத்தில் நடைபெற்ற மூன்றாவது என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.