இந்தியா

1000 அடிக்கு கீழ் கொட்டிக்கிடக்கும் தங்கம்..! மூட்டையில் அள்ளுவதற்கு உள்ளே இறங்கிய 5 பேர்..! நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி..!

Summary:

3 died who tires to steal gold from kolor gold land

கோலார் தங்க சுரங்கத்தில் தங்கம் திருட 1000 அடி கீழே இறங்கிய 5 பேரில் மூன்று பேர் உயிர் இழந்த சம்பவம் நடந்துள்ளது.

உலகில் உள்ள மிகவும் ஆழமான தங்க சுரங்கங்களில் 2 வது தங்க சுரங்கம் கோலார் தங்க சுரங்கம். இந்த சுரங்கத்தில் இருந்து தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுவந்த நிலையில், தங்கத்தின் இருப்பு குறைவு, பிரித்தெடுக்க ஆகும் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கடந்த 2001 ஆம் ஆண்டு இந்த சுரங்கம் மூடப்படுவதாக அரசு அறிவித்தது.

அன்றில் இருந்து இந்த சுரங்கம் சரியான பாதுகாப்பு இல்லாமல் இருந்துவந்தது. இந்நிலையில், 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று  சுரங்கத்தில் 1000 அடிவரை இறங்கி தங்கத்தை திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நள்ளிரவில் உள்ளே சென்ற அவர்களில் 3 பேர் திடீர் ஆக்சிஜன் குறைபாட்டால் அங்கையே மயங்கி விழுந்துள்ளன்னர்.

இரண்டு பேர் தப்பி பிழைத்து விஷயத்தை கூற, உள்ள சென்று அவர்களை மீட்பதற்குள் மூன்று பேரும் உயிர் இழந்தனர். அதில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளநிலையில், மற்றொருவரின் சடலத்தை மீட்கும் பணிகள்நடைபெற்றுவருகிறது.


Advertisement