பொதுமக்களே உஷார்.. பானி பூரி சாப்பிட்ட சிறுவர்கள் 2 பேர் மரணம்!
தற்போதைய காலகட்டத்தில் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் பொதுமக்கள் அதிகளவில் விரும்பி சாப்பிடும் உணவுகளாக உள்ளது. இது போன்ற கெட்ட எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால் உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் எச்சரித்து வருகின்றனர்.

ஆனால் இதனை அலட்சியம் செய்து பானி பூரி, ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் கெட்ட எண்ணெயில் பொறிக்கப்பட்ட தின்பண்டங்களை சாப்பிட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் உயிரிழக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது.
அதன்படி ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி. இவருக்கு ராமகிருஷ்ணா மற்றும் விஜய் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி அப்பகுதியில் உள்ள பானி பூரி கடையில் தனது மகன்களுக்கு தந்தை ரவி பானி பூரி வாங்கி கொடுத்துள்ளார்.

அதனை சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்த சிறுவர்கள் இருவருக்கும் அடுத்த சில மணி நேரத்திலேயே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக இருவரையும் அருகில் உள்ள தனியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனையடுத்து தந்தை ரவி பானி பூரி சாப்பிட்டதால் தான் தனது மகன்கள் உயர்ந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்திய வருகின்றனர். மேலும் சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.