பறவை காய்ச்சல் தாக்கத்தால்... கேரளா அரசு பண்ணையில் 1800 கோழி குஞ்சுகள் உயிரிழப்பு..!

பறவை காய்ச்சல் தாக்கத்தால்... கேரளா அரசு பண்ணையில் 1800 கோழி குஞ்சுகள் உயிரிழப்பு..!



1800 chicks died in Kerala government farm due to bird flu..

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் அரசு பண்ணையில் 1,800 கோழி குஞ்சுகள் உயிரிழந்ததுள்ளது.

பறவை காய்ச்சலால் கோழி, வாத்து போன்ற வளர்ப்பு பறவையினங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் கோழி பண்ணையில் இருந்த 1,800 கோழி குஞ்சுகள் திடீரென உயிரிழந்துள்ளன. இதனை தொடர்ந்து, கேரள விலங்குகள் நல துறை மந்திரி சின்சு ராணி, உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். 

மேலும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி உள்ளார். அதன்பிறகு, உயிரிழந்த கோழி குஞ்சுகளின் மாதிரிகளை  சேகரித்து, மத்திய பிரதேசம் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், பறவை காய்ச்சலால் கோழி குஞ்சுகள் இறந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எச்5என்1 வைரசின் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ள பறவை காய்ச்சலால் தமிழகத்தில் கோழிப்பண்ணை தொழிலில் பாதிப்பு ஏற்படும் என கோழி பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பறவைகளை கொல்வதற்கான நடைமுறைகள், பல்வேறு அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் நடைபெறும் என கேரள அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.