
18 years students
மகராஷ்டிரா மாநிலத்தின் துலே மாவட்டத்தில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் கழிவறையிலிருந்து குழந்தையின் அழுக்குரல் கேட்டுள்ளது. உடனே விடுதியின் காப்பாளர் கழிவறைக்கு சென்று பார்த்த போது அங்கு ஒரு கழிவறையின் வாளியின் பிறந்த பச்சிளம் குழந்தை அழுது கேட்டு இருந்துள்ளது.
விடுதி காப்பாளர் அந்த குழந்தையை தூக்கி சென்று மாணவிகளில் அனைவரிடமும் கேட்டுள்ளார். ஆனால் யார் என்பது தெரியவில்லை. அதனை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து மாணவிகளிடம் தனிதனியாக விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது ஒரு மாணவியின் மீது மட்டும் சந்தேகம் எழுந்துள்ளது. அதனை அடுத்து அந்த மாணவியை மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனையில் குழந்தை பெற்று எடுத்தது அந்த மாணவி தான் என்ற தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் குழந்தை மற்றும் அந்த 18 வயது மாணவியை தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் மாணவிக்கு குழந்தை பிறந்தது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement