18 வயது இளைஞருக்கு இரண்டு கிட்னியும் செயலிழப்பு..! இரண்டு கிட்னியையும் எப்படி இழந்தார் தெரியுமா..?

கொரோனா ஊரடங்கு காரணமாக மூன்று மாதங்களாக உடற்பயிற்சி கூட்டத்திற்கு செல்லாமல், மூன்று மாதம் கழித்து உடற்பயிற்சி செய்த இளைஞர் ஒருவரின் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் தொடங்கி பெரும்பாலான துறைகள் கொரோனாவால் முடங்கிப்போயுள்ளது. மேலும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், வணிக வளாகங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் இதுபோன்ற செயல்முறைகள் நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு துறைக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக மூடிக்கிடந்த உடற்பயிற்சி கூடங்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் வசிக்கும் 18 வயதான லக்ஷய பிந்திரா என்ற வாலிபர் தினமும் காலை, மாலை என இரண்டு நேரமும் ஜிமிற்க்கு சென்ற உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். கொரோனா காரணமாக ஜிம் மூடப்பட்டு இருந்ததால் இவரால் கடந்த மூன்று மாதங்களாக ஜிமிற்க்கு போக முடியவில்லை.
தற்போது ஜிம் மீண்டும் செயல்பட தொடங்கியதால் லக்ஷய பிந்திரா மீண்டும் உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு சென்றுள்ளார். ஜிம்முக்கு சென்று மூன்று மாத பயிர்சியையும் சேர்த்து அசுரத்தனமாக அவர் உடற் பயிற்சி செய்துள்ளார் .இதன் காரணமாக அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் வலி அதிகமானதை அடுத்து லக்ஷய பிந்திரா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து போனதை கண்டு மருத்துவர்கள் திடுக்கிட்டனர்.
தற்போது அவருக்கு டயாலிசில் சிகிச்சை தொடங்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.