பூரண மதுவிலக்கு இருந்தும் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி.! 20 பேர் கவலைக்கிடம்.!

பூரண மதுவிலக்கு இருந்தும் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி.! 20 பேர் கவலைக்கிடம்.!



18 people died for fake liquor

இந்தியாவில் மதுவிலக்கு என்பது சில மாநிலங்களிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . அந்த வகையில் குஜராத்தில் 1960 இல் இருந்து அங்கு மதுவிலக்கு சட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அங்கு கள்ளச்சாராயம் குடித்து 18 கிராமவாசிகள் மரணம் அடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் போடாட் மாவட்டத்தில் உள்ள நபோய் என்ற கிராமத்தில் பலர் சாராயம் குடிக்கச் சென்றுள்ளனர். ஆனால் சாராயம் குடித்த ஓரிரு மணி நேரத்தில் பலருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சொந்த வீடுகளில் சுருண்டு விழுந்து மரணம் அடைந்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடியவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் இதுவரை 18 பேர் மரணம் அடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயத்திற்கு குஜராத்தில் 18 பேர் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சாராயத்தில் ரசாயனம் கலக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.