இந்தியா

பாவங்க அந்த பொண்ணு..! இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது!! பாதிக்கப்பட்ட சிறுமியை கயிற்றால் கட்டி ஊர்வலமாக செல்லவைத்த கொடூரம்!

Summary:

பாலியல் கொடுமை செய்யப்பட்ட பெண், பாலியல் கொடுமை செய்த்தவருடன் கயிற்றால் கட்டி ஊர்வலமாக செல

பாலியல் கொடுமை செய்யப்பட்ட பெண், பாலியல் கொடுமை செய்த்தவருடன் கயிற்றால் கட்டி ஊர்வலமாக செல்லவைத்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அலிராஜ்பூர் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியானது பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி என கூறப்படுகிறது. இந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக பாலியல் கொடுமை செய்துள்ளார்.

இந்த தகவல் கிராமவாசிகளுக்கு தெரியவந்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக செயல்படாமல், பாலியல் கொடுமை செய்தவனையும், பாதிக்கப்பட்ட சிறுமியையும் கயிற்றால் கட்டி ஊர்வலமாக கிராம மக்கள் அழைத்து சென்றுள்ளனர்.

இந்த காட்சிகளை சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட, இந்த சம்பவம் கடும் வைரலானது. விஷயம் தெரிந்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் சிறுமியை அடித்து துன்புறுத்தி ஊர்வலமாக நடக்க வைத்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட 6 பேரை கைதுசெய்துள்ள போலீசார், பாலியல் கொடுமை செய்த இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளானது மட்டும் இல்லாமல், சொந்த குடும்பத்தினரே அவரை அடித்து, துன்புறுத்தி சம்மந்தபட்ட நபருடன் ஊர்வலமாக அழைத்துச்சென்ற சம்பவம் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement