பிறந்த நாளன்று இப்படியா நடக்கணும்! தனியாக வீட்டில் இருந்த 16 வயது சிறுவன்! கேக் வாங்க சென்ற பெற்றோர்! வீட்டில் மகன் செய்த அதிர்ச்சி சம்பவம்....

சூரத் நகரில் நடந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் லட்ச்மி நகர் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவன் ஒருவன் தனது பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகிழ்ச்சியுடன் துவங்கிய நாள் சோகமாக முடிந்தது
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி வினோத் பிரதான் என்பவரின் மகன் அஷுதோஷ், கடந்த ஆண்டு 8ஆம் வகுப்பு முடித்திருந்தார். பிறந்த நாளையொட்டி அவரது பெற்றோர் இருவரும் கேக் வாங்கச் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த அஷுதோஷ், நைலான் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெற்றோரின் கண்முன்னே பரிதாபமான காட்சி
வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், மகன் தூக்கில் தொங்கியதை பார்த்ததும் கண்ணீர் மழை பொழிந்தனர். பெற்றோரின் அலறல் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டினர் விரைந்து வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
இதையும் படிங்க: ராஜநாகம் குஞ்சுகளை எப்படி வளர்க்கும் தெரியுமா? ராஜா நாகத்தின் தாய்மையின் ரகசியத்தை பாருங்க...
தற்கொலையின் பின்னணி குறித்து விசாரணை
இந்த தற்கொலையின் காரணம் என்ன என்பது தற்போது உறுதி செய்யப்படவில்லை. தற்கொலைக்கான உண்மை காரணங்களை கண்டறிவதற்காக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் எதற்காக இந்த கடுமையான முடிவை எடுத்தார் என்பது சமூகத்தில் கவலையையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: Video: வீட்டு லிப்ட்டில் மாட்டி கொண்ட சிறுவன்! கதவை திறக்க முயற்சி செய்த சிறுவனின் பரிதாப நிலை! பரபரப்பான வைரல் வீடியோ....