தமிழகம் இந்தியா

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுகிறதா? மத்திய அரசு அதிரடி!

Summary:

144 in india

சீனாவின் உகான் நகரை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். 

நாடு முழுவதும் இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஏப்ரல் 14ஆம் தேதிக்கு மேலும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படும் என தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தது. இந்தநிலையில் ஏப்ரல் 14-ம் தேதிக்கு மேல் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு நீடிக்கப்படும் என்ற தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 


Advertisement