இந்தியா மருத்துவம்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிரதமர் அதிரடி! என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Summary:

144 for corona


கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கிவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. இந்தியா மிக மன தைரியத்துடன் வைரஸ் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஆரம்பித்த கொரோனோ வைரஸ் இன்று உலகின் பல நாடுகளிலும் பரவி உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. அதிலும் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 150க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல் மக்களும் வெளிப்பயணகளை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் முறைக்கு மாற வேண்டும். இரவு நேரத்தில் வெளியே வருவதை தவிருங்கள். இந்த ஒத்துழைப்பு நாட்டு மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். வரும் மார்ச் 22 ஞாயிற்று கிழமை அன்று ஊரடங்கு உத்தரவு மக்களுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மார்ச் 22 ஞாயிறன்று பொதுமக்கள் வெளியே வராமல் ஊரடங்கை தாங்களே அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.


Advertisement