புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. கடித்து குதறிய தெரு நாய்கள்.!! 14 மாத குழந்தை பலி.!!
ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்ததில் 14 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி என்டிஆர் மாவட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள்
ஆந்திர மாநிலத்தின் என்டிஆர் மாவட்டத்திலுள்ள பெனுகஞ்சிப்ரோலு என்ற இடத்தில் மாடல் காலனி அமைந்திருக்கிறது. இங்கு வசித்து வரும் கோபால் ராவ் என்பவரது 14 மாத ஆண் குழந்தை தெருவில் விளையாடி கொண்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் சிறுவனை கடித்து குதறி இருக்கின்றன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தெருநாய்களை விரட்டி விட்டு சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பரிதாபமாக பலியான குழந்தை
இந்நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் வெறி நாய்கள் கடித்ததில் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிர்ச்சி... கர்ப்பமான 14 வயது சிறுமி.!! 40 வயது நபர் கைது.!!
ஊர் மக்கள் போராட்டம்
இந்நிலையில் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக பெனுகஞ்சிப்ரோலு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த குழந்தைக்கு நீதி வேண்டியும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரியும் அவர்கள் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இறந்த குழந்தையின் தந்தை கோபால் ராவ் கிராமத்தில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக தெரிவித்தார். இதனால் பல பெற்றோர்கள் அச்சமடைந்து தங்கள் குழந்தைகளை வெளியே விடுவதற்கு பயப்படுவதாகவும் கூறினார். மேலும் அரசு இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: அட கொடுமையே... சொந்த அண்ணனுடன் கள்ள உறவில் இருந்த மனைவி.!! கணவன் எடுத்த விபரீத முடிவு.!!