புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அதிர்ச்சி... கர்ப்பமான 14 வயது சிறுமி.!! 40 வயது நபர் கைது.!!
பஞ்சாப் மாநிலத்தில் 14 வயது சிறுமி கர்ப்பமடைந்தது தொடர்பாக 40 வயது நபர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி
பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹோசியார்பூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பம்
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக சிறுமியிடம் கேட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதையும் படிங்க: அட கொடுமையே... சொந்த அண்ணனுடன் கள்ள உறவில் இருந்த மனைவி.!! கணவன் எடுத்த விபரீத முடிவு.!!
குற்றவாளி கைது
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமடைந்தது தொடர்பாக 40 வயது நபரை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ஷாக்கிங்... அலுவலகத்தில் சடலமாக கிடந்த பிஜேபி நிர்வாகி.!! இளம் பெண்ணிடம் தீவிர விசாரணை.!!