கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியான 14 மாதக்குழந்தை..!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியான 14 மாதக்குழந்தை..!


14 month child died due to corona

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினர் குஜராத் மாநிலம் ராம்நகரில் உள்ள துறைமுக தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். அந்த தம்பதியினருக்கு 14 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது.

corona

இந்நிலையில் திடீரென அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதில் அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து 2 நாட்கள் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால் குழந்தையின் உடல் உறுப்புகள் ஒவ்வென்றாக செயலிழந்து போகவே அந்த 14 மாத குழந்தை பரிதாபமாக கொரோனாவுக்கு பலியான சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது.