
13 lakhs people affected by the corona
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. அதில் தற்போது இந்தியாவில் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து வெளியே செல்லவும், சமூக இடைவெளிகளை பின்பற்றவும், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவவும் அறிவுறுத்தப்படுகின்றனர். இதன்மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தி பாதுகாப்புடன் இருக்க முடியும் என அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் முதலில் கொரோனா பரவலானது 1 லட்சத்தை கடக்க கிட்டத்தட்ட 110 நாட்கள் ஆன நிலையில் தற்போது புதிய உச்சமாக இரண்டே நாளில் 1 லட்சம் பாதிப்பை எட்டியுள்ளது. இதனால் இந்தியா இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 13 லட்சத்தை தாண்டியுள்ளது.
Advertisement
Advertisement