துபாய் விமான நிலையத்திற்கு வந்த இந்தியரின் விவரங்களை பார்த்து அசந்துபோன துபாய் அதிகாரிகள். என்ன காரணம் தெரியுமா?
துபாய் விமான நிலையத்திற்கு வந்த இந்தியரின் விவரங்களை பார்த்து அசந்துபோன துபாய் அதிகாரிகள். என்ன காரணம் தெரியுமா?

துபாய் விமான நிலையத்திற்கு சென்ற இந்தியர் ஒருவரை பார்த்து அந்த நாட்டு விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பிரமித்துப்போய் நின்ற சம்பவம் நடந்துள்ளது. அந்த பிரமிப்பிற்கு முக்கிய காரணம் அந்த நபரின் வயதுதான். ஆம், 123 வயதுடைய தாத்தாவை பார்த்தவர்கள் ஒருநிமிடம் பிரமித்துப்போய் நின்றுள்னனர்.
பொதுவாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் ஆவணங்களை சரிபார்ப்பது வழக்கம். அந்த வகையில் கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த சுவாமி சிவானந்தா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துபாய் சென்றுள்ளார்.
அவரது ஆவணங்களை பரிசோதித்ததில் அவர் பிறந்த வருடம் 1896 என்றும் அவரது தற்போதைய வயது 123 என்பதும் தெரியவந்தது. இந்த வயதில் இவர் எப்படி விமானத்தில் ஆரோக்கியமாக பயணித்துவந்தார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.
மேலும், அங்கிருந்த சிலர் அந்த தாத்தாவுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது