வயசு 12 தான்.. ஆனால் சிறுவன் செஞ்ச காரியம் இருக்கே.. அது ரொம்ப பெருசு.. ஒரே குத்துதான்.. தெறித்து ஓடிய சிறுத்தை..



12 years old boy escaped from leopard

தன்னை தக்க வந்த சிறுத்தை புலியை சிறுவன் ஒருவன் சிறுத்தையின் கண்ணில் குத்தி விரட்டியடித்த சம்பவம் வைரலாகிவருகிறது.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள கடகோலா அருகேயுள்ள பீரஹோவதானஹண்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுவன் நந்தன். இவர் தனது தந்தை ரவியுடன் சேர்ந்து தனது வீட்டில் இருக்கும் கால்நடைகளுக்கு தீனி வைத்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது சிறுவனின் வீட்டிற்கு அருகே இருக்கும் 140 ஏக்கர் பரப்பளவில் கர்நாடக மின்வாரியத்துக்கு சொந்தமான மிகப் பெரிய காலி இடத்தில் இருந்து சிறுத்தை ஒன்று சிறுவனை நோக்கி வந்துள்ளது. சிறுவனை நோக்கி வந்த சிறுத்தை சிறுவனை தாக்க தொடங்கியுள்ளது.

Viral News

சிறுத்தையின் திடீர் தாக்குதலால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிபோயுள்ளார் சிறுவனின் தந்தை ரவி. அதேநேரம், சிறுத்தையின் தாக்குதலால் தைரியத்தை இழந்து விடாத சிறுவன் நந்தன், தன் புத்தியை பயன்படுத்தினான். எங்கே தாக்கினால் , சிறுத்தை புலி திணறும் என்று சரியாக கணித்து, சிறுத்தையின் கண்ணில் தனது விரலால் குத்தியுள்ளான்.

இதனால் சிறுத்தை சிறுவனை தாக்குவதை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. இதனிடையே சிறுத்தையின் தாக்குதலால் சிறுவனின் தோள்பட்டை, கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், தனது திறமையாலும், சமயோஜித புத்தியாலும், சிறுத்தையிடம் இருந்து தப்பித்த அந்த சிறுவனை அந்த பகுதி மக்கள் முழுவதும் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதி மக்கள் போராத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே கர்நாடக மின்வாரிய காலி இடத்தில் உள்ள புதர்களில் சிறுத்தை மறைந்திருப்பதாகவும், அதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கும் அவர்கள் எடுக்காததாலையே இதுபோன்ற அசம்பாவிதம் நடந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள வனத்துறை அதிகாரிகள், பொதுவாக சிறுத்தைகள் மனிதர்களை தாக்குவது இல்லை, ஆனால் இங்கு சிறுவனை சிறுத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. சிறுவனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது.

மேலும்  சிறுவன் சிறுத்தை புலியின் கண்களில் விரலை விட்டு குத்தியது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனனர்.