இந்தியா Covid-19

டெல்லியில் 12 நாட்களில் கட்டப்பட்ட 10,000 படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனை!

Summary:

10000 bed corona hospital construction in 12 days

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் தலைநகர் டெல்லியும் ஒன்று. டெல்லியில் ஒரே நாளில் 2,505 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 97,200 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் குப்பை கிடங்காக பயன்பட்டு வந்த மைதானம் ஒன்றை சீரமைத்து கொரோனா மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் 10000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வெறும் 12 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

அந்த மருத்துவமனைக்கு சர்தார் படேல் கொரோனா மருத்துவமனை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இந்த மருத்துவமனையில் முதல் ஒரு மாதத்துக்கு ராணுவத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் அடங்கிய 600 பேர் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் 1,700 அடி நீளம், 700 அடி அகலம் - தோராயமாக 20 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள சர்தார் வல்லப் பாய் படேல் கொரோனா மருத்துவமனைக்கு வருகை தந்தனர். 


Advertisement