தமிழகம் இந்தியா

மருத்துவர்களுடன் உல்லாசமாக இருக்க இளம் பெண்கள் சப்ளே! வெளியான அதிர்ச்சி காரணம்.! நீதிபதிகள் வேதனை..!

Summary:

Women supply to doctors for selling tablets

தங்கள் மருந்துகளை விற்பதற்காக மருத்துவர்களுக்கு பரிசு வழங்கியது உள்ளிட்ட விற்பனை மேம்பாட்டு செலவுகளை தங்கள் வருமானத்தில் இருந்து தள்ளுபடி செய்யக்கூறி, மருந்து உற்பத்தி நிறுவனங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து வருமான வரித்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையில், தங்கள் மருந்துகளை அதிகம் விற்பதற்காக, மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு தங்க நகை, கிரெடிட் கார்ட், இன்ப சுற்றுலா போன்றவற்றை ஏற்பாடு செய்வதாகவும்

மருத்துவர்கள் உல்லாசமாக இருக்க இளம் பெண்களை லஞ்சமாக அனுப்பிவைக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாகவும், இது இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறிய செயல் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்ட மருத்துவர்கள், மருந்து நிறுவனங்கள், அவர்களுக்கு எதிராக எடுக்காத நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 20-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.


Advertisement