நாக்கில் ஏற்படும் புற்றுநோய்: மக்களே உஷார்.. இந்த அறிகுறி இருக்கா? 



Tongue Cancer in Tamil 


புற்றுநோய் இன்றளவில் மிகப்பெரிய உலகத் தொற்றுநோயாக மாறி இருக்கிறது. உணவு, உடை, கலாச்சார மோகம் என புதுவிதமான தாக்கம் உலகளவில் அதிகரித்து, உடல்நலனை சரிவர பேணிக்காக்கும் நபர்கள் முதல், பலருக்கும் புற்றுநோயின் தாக்கம் கடும் அதிர்ச்சியை தருகிறது. அந்த வகையில், இன்று நாக்கு பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

அறிகுறியை அலட்சிப்படுத்த வேண்டாம்

நாக்கில் புற்றுநோய் என்பது ஸ்குவாம்ஸ் செல் கார்சினோமாவா காரணமாக ஏற்படுகிறது. இந்த செல்கள் தோல் மற்றும் நாக்கின் மேல்புறத்தில் மெல்லிய, தட்டையான செல்களாக இருக்கும். புற்றுநோய் உடலின் எந்த பகுதியிலும் தோன்றலாம் என்ற முறையில், அதன் அறிகுறிகள் ஆரம்பத்தில் தென்படும் எனினும், சாதாரணமானது போல தோன்றி புறக்கணிக்கப்பட்டு, பின் இறுதிக்கட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

நாக்கு பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டால், வாய் முழுவதும் புற்றுநோய் பரவலாம். நாக்கு அல்லது தொண்டை பகுதியில் ஏற்படும் புற்றுநோய் நாக்கு புற்றுநோய் என அழைக்கப்படுகிறது. இதன் அறிகுறியாக நாக்கு பகுதியில், வாய் அல்லது நாக்கில் சிவந்த, வெள்ளை நிரப்புள்ளிகள், தொடர் தொண்டை வலி, தொண்டையில் எதோ சிக்குவது போல உணர்தல், 
தாடை வீக்கம், வாய், நாக்கு உணர்வில்லாதது போன்றவை ஆகும். 

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் சிக்கன்.. இப்படி சாப்பிட்டால் போதும்.!

காரணம்

நாக்கில் இருக்கும் ஆரோக்கியம் நிறைந்த திசுவின் டிஎன்ஏ மாறும்போது, புற்றுநோய் தொடங்கும். திசுக்கள் என்ன பணியை செய்ய வேண்டும் என திசுவின் டிஎன்ஏ அமைப்பில் இருக்கும். ஆனால், திசுக்கள் தொடர்ந்து வளருவதால், இறக்கும் நேரத்திலும் அவை இறவாது. கூடுதல் திசுக்கள் இவ்வாறாக உண்டாகி கட்டிகள் உருவாகிறது. திசுக்கள் உடைந்து பிற இடங்களிலும் பரவினால், புற்றுநோய் பரவும். புகையிலை பயன்பாடு காரணமாகவும் வாய் / நாக்கு புற்றுநோய் ஏற்படும். மதுபானம் அருந்துதலும் புற்றுநோயின் தாக்கத்தை அதிகரிக்கும். 

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை நாடி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. 

இதையும் படிங்க: அடடே செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? டிப்ஸ் இதோ.!