மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
உடல் எடையை குறைக்கும் சிக்கன்.. இப்படி சாப்பிட்டால் போதும்.!

உடல் எடை குறைப்பு வியாபாரம்
இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் உடல் எடையை குறைப்பது பற்றிய தேடல்களும், ஜிம், டயட் என்று ஒரு பெரிய வியாபாரமே உடல் எடை குறைப்பது பற்றி நடந்து வருகிறது. என்னதான் உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், அதனை முறையாக அனைவரும் பயன்படுத்துகிறார்களா என்றால் கேள்வி குறிதான்.
ஒரு சிலர் மட்டுமே முனைப்புடன் பின்பற்றி உடல் எடையை குறைக்கின்றனர். மற்றவர்கள் பெயரளவிற்கு முயற்சித்து விட்டு அதன் பின் தங்கள் போக்கில் விட்டு விடுகின்றனர். நம்மில் பெரும்பாலும் சிக்கன் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற குழப்பம் நீடிக்கிறது. ஆனால் அது உண்மை இல்லை.
இதையும் படிங்க: 10 கிலோ வரை எடை குறைய உதவும் நீர்.. எப்படி பயன்படுத்துவது.?!
எடை குறைக்கும் சிக்கன்
புரதச்சத்து நிறைந்த சிக்கனை எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும். இது தசைகளை வலுப்படுத்துவதுடன் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. சிக்கன் சாப்பிடுவதால் நீண்ட நேரம் நமக்கு பசிக்காது. சிறிதளவு சாப்பிட்டாலே போதுமானதாக இருக்கும். மீண்டும் மீண்டும் பசி எடுக்கும் பிரச்சனையை இது குறைக்கும். இது மட்டுமல்லாமல் இது குறைந்த கலோரிகள் கொண்டது.
எப்படி சாப்பிடணும்?
எனவே உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு இந்த சிக்கன் மிகவும் நல்லது. இதனை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவது, மசாலாக்கள் கலந்து சாப்பிடுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். சிக்கனிலேயே எண்ணெய் இருக்கும். எனவே, அதை சமைக்க தனியாக எண்ணெய் பயன்படுத்த வேண்டாம். சுவைக்காக மசாலாக்களையும் பயன்படுத்தாமல் சமைத்து சாப்பிட்டால் சிக்கன் சாப்பிட்டே எடையை குறைக்கலாம்.
இதையும் படிங்க: அடடே செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? டிப்ஸ் இதோ.!