மூச்சுவிட ரொம்ப சிரமமா இருக்கா?.. அப்போ இது உங்களுக்குத்தான்..! இந்த டிப்ஸ் உங்கள் நுரையீரலை பாதுகாக்கும்..!!

மூச்சுவிட ரொம்ப சிரமமா இருக்கா?.. அப்போ இது உங்களுக்குத்தான்..! இந்த டிப்ஸ் உங்கள் நுரையீரலை பாதுகாக்கும்..!!


Tips for keep your lungs healthy

உடலில் வெளிப்புற உறுப்புகளை போல நுரையீரலை பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியமாகிறது. நுரையீரல் ஆரோக்கியமாக இல்லாதபட்சத்தில் உடலில் ஆக்சிஜன் கடத்தப்படுவதில் பிரச்சனை ஏற்படும். மேலும் உடல்நல பிரச்சனைகளும் ஏற்படும். நுரையீரலை கட்டாயம் பேணி காக்க வேண்டும். நுரையீரலை பாதுகாக்க புகைபிடிக்காமல் இருப்பது அவசியம்.

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கமானது அதிகரித்துவரும் நிலையில், இது நுரையீரலுக்கு மோசமான செயல் என்பதை உணர வேண்டும். நச்சுப்புகை, காற்றுபைகளை ஒதுக்கி மூச்சுதிணறலை ஏற்படுத்தும். புகைபிடிப்பதால் நுரையீரல் திசுக்கள் சேதப்படுத்தப்படும். 

Lungs healthy

உடல் ஆரோக்கியத்திற்கு உடல்பயிற்சி மிக முக்கியம் என்பதால், தினமும் உடற்பயிற்சி செய்வது நுரையீரலை ஆரோக்கியத்துடன் பாதுகாக்கும். அதே போல மூச்சுப்பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டும். மாசு மற்றும் புகை போன்றவற்றை சுவாசிக்கக்கூடாது. இது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தி, நமது உடல் நலத்தை பாதிக்கும். இவ்வாறான சமயங்களில் மாஸ்க் அணிவது நல்லது.