ஆபத்து.. உடலில் இப்படியான கட்டிகள் உள்ளதா?.. கவனம்..!



tips-about-lipoma-fat-tumors-in-tamil

நமது உடலில் வளரும் கட்டியில் புற்றுநோய்கட்டிகள், சாதாரண கட்டிகள் என்று இரண்டு வகை உள்ளன. சாதாரண கட்டிகள் பொதுவாக வலிப்பது கிடையாது. புற்றுநோய்கட்டிகள் தொடக்கத்தில் வலி இல்லாமல் இருந்தாலும், தீடீரென வலியை ஏற்படுத்தும். கட்டியின் நிறம் மாறுதல், அளவு கூடுதல், உடல் எடை கூடுதல், பசி கூடுவது போன்றவை புற்றுநோய்கட்டிக்கான கூடுதல் அறிகுறிகள் ஆகும். சாதாரண கட்டிகளை பொறுத்தவரையில் கொழுப்புக்கட்டி, நார்க்கட்டி, நீர்க்கட்டி, திசுக்கட்டி என்று பல வகைகள் உள்ளன.

கொழுப்புக்கட்டி : 

கொழுப்பு கட்டி என்பது கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து கட்டிபோல திரண்டு விடுவது ஆகும். இவை பொதுவாக தோல்களுக்கும் - தசைக்கும் இடையில் வளரும். மெதுவாக வளரும் தன்மை கொண்ட கொழுப்பு கட்டி, பார்க்க உருண்டையாக இருக்கும். இது உடலின் எந்த பகுதியிலும் தோன்ற வாய்ப்புள்ளது. பெரும்பாலும் கழுத்து, முதுகு, வயிறு, தொடை, கைகள் மற்றும் தோல் பகுதியில் ஏற்படும். 

health tips

கொழுப்புக்கட்டி வளர சரியான காரணம் தற்போது வரை கண்டறியப்படவில்லை என்றாலும், பரம்பரை மற்றும் அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிடுதல், உடல் பருமன், கட்டுப்படாத நீரழிவு பிரச்சனை, மதுபானம் அருந்துதல் போன்றவை இதற்கான உந்துதலாக இருக்கிறது. கட்டி ஏற்பட்டு இருப்பின் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை செய்துகொள்வது நல்லது. கொழுப்பு கட்டியாக இருந்தால் பிரச்சனை இல்லை. விருப்பம் இருப்பின் அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்றலாம். 

கொழுப்புக்கட்டி போலவே உடலில் ஏற்படும் கட்டி திடீரென வளர்ந்து, வடிவம் மாறி வலியை ஏற்படுத்தினால், கட்டியின் மேல்புற சரும நிறம் மாறுகிறது என்றால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. அவை ஒருவேளை புற்றுநோய் கட்டியாக இருந்தால் தொடக்கத்திலேயே சிகிச்சை பெற்று உடல்நலத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.