தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
பாம்பு கடிக்கு மட்டுமல்ல, விஷ காய்ச்சல்கள் வந்தாலும் இதுவே அருமருந்து: சிறியாநங்கையை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்..!
பாம்புகள் நெருங்க பயப்படும் செடி ஒன்று உள்ளது, அதைப்பற்றி இந்த தலைமுறையினருக்கு அறிமுகம் செய்கிறோம் வாருங்கள்.
சிறியாநங்கை ஆம் அதுதான் அதன் பெயர், பாம்பு தீண்டியவருக்கு முதலில் கொடுக்கப்படும் மூலிகை இதுதான். எப்பேர்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மை கொண்ட மூலிகை செடி இது. மருத்துவ வசதிகள் பெருகுவதற்கு முன்னர் பல்வேறு விதமான விஷக்கடிக்கும் முதன்மை மருந்தாக இதன் இலைகளே பயன்படுத்தப்பட்டன.
சிறியாநங்கையைப் போல பெரியாநங்கை, முள்ளாநங்கை, மலைநங்கை, வைங்கநங்கை, கரு நங்கை, வெண்ணங்கை, வசியாநங்கை, செந்நங்கை எனப் பல நங்கைகள் இருந்த போதிலும் சிறியாநங்கையும் பெரியாநங்கையும் மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சிறியாநங்கையின் இலைகள் மற்றும் வேர் பகுதிகள் அனைத்தும் அற்புதமான மருத்துவ குணம் கொண்டவை. தினமும் காலையில் உணவு உட்கொள்வதற்கு முன்பு சிறியா நங்கையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி) வியாதிகளைக் குணப்படுத்தும்.
விஷக் காய்ச்சல் (ப்ளு, டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்), கல்லீரல் நோய்களைப் போக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து. சைனஸ் மற்றும் சளியினால் ஏற்படும் நோய்களை போக்கும்.
சிறியாநங்கையின் இலையை அம்மியில் வைத்து அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு எடுத்து பாலுடன் கலந்து தினந்தோறும் காலையில் உட்கோன்டால் உடல் வலிமையாகும். இந்த இலையை நன்கு காயவைத்து பொடியாக்கி, அதனை ஒரு டீ-ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதே அளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை 2 வேளையும் சாப்பிட்டால் உடல் வஜ்ஜிரமாகும்.