வியர்க்குரு பிரச்சனையால் அவதிப்படுறீங்கா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.. குழந்தைகளுக்கும் நல்லது.!



Summer Season heat Rash Viyarkuru avoid tips 

 

கோடைகாலம் என்றாலே வெயில் சார்ந்த பிரச்சனைகள் பலருக்கும் ஏற்படும். அந்த வகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் உடல் வெப்பத்தை குறைக்க தினமும் தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும். நண்பகல் வேளைகளில் வெளியே செல்லாமல் இருக்க வேண்டும். உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும் இளநீர், மோர், பழைய கஞ்சி நீர், தர்பூசணி, வெள்ளரி உட்பட பழங்களை சாப்பிட வேண்டும்.

அதேபோல, இக்காலத்தில் வியர்க்குரு பிரச்சனையும் ஏற்படும். வியர்வையில் இருந்து வெளியேறும் பாக்டீரியா, வியர்க்குரு ஏற்பட வழிவகை செய்கிறது. இதில் இருந்து நாம் தப்பிக்க தினமும் குறைந்தது 3 வேளை குளிக்க வேண்டும். குளிக்கும்போது உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி வியர்குருவில் இருந்து தப்பிக்கலாம்.

இன்றளவில் கடைகளில் கிடைக்கும் ஆண்டி பாக்டீரியல் பவுடரையும் பயன்படுத்தி பலன் பெறலாம். குழந்தைகளுக்கு வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையிலான காட்டன் உடையை அணியலாம். எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகள், உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கலாம். இதனால் வியர்க்குரு வராமல் பாதுகாக்கலாம்.